ரயில்வே ஸ்டேஷனில் புதிய ஏ.சி., ஓய்வறை
திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில், முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் அறை எதிரே, கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.குளியலறை, கழிப்பிடம், முற்றிலும் ேஷாபா ஹால், டீ, காபி, சிற்றுண்டி வசதி கொண்ட இந்த அறையை பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு, 25 ரூபாய் கட்டணம். 'வைபை' வசதி,அனைத்து ஆன்லைன் பேமெண்ட் வசதிகளும் உள்ளது.முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி., பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இதுவரை ஏ.சி., ஓய்வறை வசதி இல்லை. ரயில் தாமதமானால், பயணிகள் பிளாட்பார்மில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது.'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல் பிளாட்பார்மில் நுழைவு வாயிலில் ஏ.சி., ஓய்வறை திறக்கப்பட்டுள் ளது; பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.