மேலும் செய்திகள்
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் 'ஏஐசி ரைஸ்'
12-Dec-2024
சாய ஆலை உரிமையாளர்கள் புது அவதாரம்!
16-Dec-2024
திருப்பூர்; தமிழக அரசின் ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தி புத்தாக்கத்துடன் கூடிய புதிய தொழில்களை கண்டறிய ஊக்குவிக்க வேண்டும், என, துணிநுால்துறை இயக்குனர் லலிதா பேசினார்.மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதலுடன், திருப்பூரில் ஜவுளி மற்றும் ஆடைகளுக்கான 'நிப்ட் - டீ' அடல் இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஜவுளி மற்றும் கைத்தறி துணி நுால் துறை இயக்குனர் லலிதா, மண்டல துணை இயக்குனர் ராகவன் ஆகியோர், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் உள்ள புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்து, இங்கு கலந்தாய்வு நடத்தினர்.கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், கல்லுாரி தலைவர் மோகன் மற்றும் இன்குபேஷன் மையத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான தொழில்கள் குறித்து விவரித்தனர்.இயக்குனர் லலிதா பேசுகையில், ''மத்திய, மாநில அரசின் திட்டங்கள் தொழில்நுட்ப ஜவுளி துறைக்கான உதவிகள்மற்றும் மானியங்கள் அனைவரிடம் சென்றடைய அடல் இன்குபேஷன் மையம் உதவ வேண்டும். தமிழக அரசின் ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தி புத்தாக்கத்துடன் கூடிய புதிய தொழில்களை கண்டறிய ஊக்குவிக்க வேண்டும். சாய ஆலைகள் செயற்கை ரசாயன சாயங்களை பயன்படுத்தாமல், உப்பில்லாத, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சாயங்களை பயன்படுத்த முன்வர வேண்டும், என்றார்.புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பனியன் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் ஜவுளி ரகங்கள் மற்றும் மகளிருக்கான நாப்கின் தயாரிப்பு குறித்த கண்காட்சியை அமைத்திருந்தனர். சாய ஆலைகளில் சுத்திகரிப்பின் போது பிரித்து எடுக்கப்படும் ரசாயனங்களைக் கொண்டு மீண்டும் புதிய வகையில் பயன்படுத்துவது குறித்த கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இவற்றை பார்வையிட்ட இயக்குனர், வெகுவாக பாராட்டினார்.''இவற்றை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப்படும்'' என்று இயக்குனர் உறுதி அளித்துள்ளதாக, அடல் இன்குபேஷன் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய, மாநில அரசின் திட்டங்கள் தொழில்நுட்ப ஜவுளி துறைக்கான உதவிகள்மற்றும் மானியங்கள் அனைவரிடம் சென்றடைய அடல் இன்குபேஷன் மையம் உதவ வேண்டும்.
12-Dec-2024
16-Dec-2024