வருங்கால வைப்பு நிதி மண்டல புதிய கமிஷனர் பொறுப்பேற்பு
திருப்பூர், : திருப்பூரில் அதிகரித்து வரும் தொழில்துறை செயல்பாடு மற்றும், வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டத்தில், மண்டல பி.எப்., அலுவலகம் அமைக்கப்பட்டது. மண்டல அலுவலகம், விரைவில் பிரத்யேக கட்டடத்தில் செயல்பட துவங்கும்; அதுவரை, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள, பி.எப்., அலுவலகத்தில், மண்டல அலுவலகம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எப்., மண்டல அலுவலகத்தில், கமிஷனராக அபிேஷக் ரஞ்சன் பொறுப்பேற்றார். அவர், ''புதிய மண்டல அலுவலகம் விரைவில் திறக்கப்படும். தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகள் வழங்குவது மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார். வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள், பல்லடம் ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில், அனைத்து வேலை நாட்களிலும், மாலை 4:00 முதல் மாலை 5:00 மணி வரை, நேரில் சந்திக்கலாம் என, அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.