மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
திருப்பூர் : கொரிய நாட்டு 'கிஸ்கோ' நிறுவன தயாரிப்பிலான புதியவகை சாயங்கள், ஜவுளி ரகங்களில் மிக நேர்த்தியான சாயமேற்றுதலுக்கு கைகொடுப்பதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கிஸ்கோ இந்தியா மற்றும் 'கிஸ்கோ' தென் கொரியா நிறுவனங்கள் சார்பில், ஜவுளி துறைக்கான புதிய சாயங்கள் மற்றும் புதுமையான நிலையான மற்றும் நம்பகமான தீர்வுகள் குறித்த கருத்தரங்கம், திருப்பூர் அருகே நடைபெற்றது.'கிஸ்கோ' நிறுவன சர்வதேச வர்த்தக இயக்குனர் ஜின் கிம் தலைமை வகித்தார். 'கிஸ்கோ' நிறுவனத்தின் இந்திய இயக்குனர் ரோஹித் கண்ணா வரவேற்றார்.கருத்தரங்கை துவக்கி வைத்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் பேசியதாவது:திருப்பூரின் பின்னலாடை உற்பத்தித்துறை, உலக அரங்கில் தனித்துவம் பெற்றுள்ளது. ஆடை உற்பத்தியில், சாயங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. துவக்க காலங்களில், ஒரு கிலோ துணிக்கு சாயமேற்ற, 15 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது.படிப்படியாக தண்ணீர் பயன்பாடு குறையத் துவங்கி தற்போது, மூன்று லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ துணி சாயமேற்றப்படுகிறது.குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சாயமேற்றும் இயந்திரங்களை நிறுவு வதற்காக, சாய ஆலைகள் அதிக முதலீடு செய்துள்ளன. ஆனால், சாய ஆலைகளுக்கு கிடைக்கும் கட்டணம், போதுமானதாக இல்லை. பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் குறித்து தெரிவித்து, ஆயத்த ஆடை ரகங்களுக்கு வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து கூடுதல் விலை பெற்று, சாய ஆலைகளுக்கு கட்டண உயர்வு வழங்கி, பகிரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கிஸ்கோ கொரியா நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் டிவைன் உள்பட தொழில்நுட்ப வல்லு நர்கள், புதிய வகை சாயங்கள் மற்றும் சாயமேற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.'கிஸ்கோ' தொழில்நுட்ப வல்லுனர்கள் பேசியதாவது:'கிஸ்கோ' நிறுவனம் நேச்சர் ப்ளஸ் என்கிற புதுவகை சாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பருத்தி துணி ரகங்களுக்கு சாயம் ஏற்றுவதில் உள்ள சவால்களுக்கு தீர்வாக அமைகிறது.குறைந்த தண்ணீர் பயன்பாடு, விரைவான சாயமேற்றுதல் மூலம் நேரமும், ஆற்றலும் சேமிக்கப்படுகிறது. 'சினோலான் - இ.எக்ஸ்.டபிள்யூ., -எஸ்.பி.,' சாயங்கள், பாலியெஸ்டர் துணி ரகங்களில் மிக நேர்த்தியான சாயமேற்றுதலைசாத்தியப்படுத்துகிறது. 'மேட் டூ லாஸ்ட்' தொழில்நுட்பத்தில் சாயமேற்றப்பட்ட துணிகள், 25 முறை சலவை செய்தாலும், புதுமை மாறாமல் இருக்கும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.திருப்பூர் பகுதி சாயம், ரசாயனங்கள் விற்பனையாளர்கள், சாய ஆலை நிறுவனத்தினர், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். புதிய வகை சாயம் தொடர்பான தங்கள் சந்தேகங்களை, தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, தெளிவு பெற்றனர்.
24-Jun-2025