உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீவிரவாதம் அழிய நிகும்பலா யாகம்

தீவிரவாதம் அழிய நிகும்பலா யாகம்

பொங்கலுார்: பொங்கலுார், வலசுப்பாளையத்தில், ஜெய்சக்தி ஞான விநாயகர் கோவில் நிர்வாகத்தின் பிரபஞ்சானந்தா, தெய்வசிகாமணி சுவாமிகள் ஏற்பாட்டில், மூத்தோர் ஆதரவு சரணாலயம் துவக்கப்படவுள்ளது.உலகில் அமைதி நிலவவும், வன்முறை, பயங்கரவாதம் அகலவும் வேண்டி கூட்டு பிரார்த்தனை வழிபாடு, பிரித்தியங்கரா தேவி நிகும்பலா மஹா யாகம் ஆகியன நாளை, (25ம் தேதி) நடக்கிறது. இதில், 1,108 சிவனடியார்கள் பங்கேற்று, 108 மூலிகைகள், 108 மூட்டை மிளகாய் யாகத்தில் சமர்ப்பித்து யாகத்தை நடத்துகின்றனர்.சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமி, முத்து சிவராமசாமி அடிகளார், மவுன சிவாச்சல அடிகளார், காமாட்சிதாச சுவாமி, பஞ்சலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி