உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிட்சிட்டி வாலிபால் போட்டி துவங்கியது

நிட்சிட்டி வாலிபால் போட்டி துவங்கியது

திருப்பூர்: திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) சார்பில், பள்ளி அணிகளுக்கான, 29 வது நிட்சிட்டி வாலிபால் போட்டி, சிறுபூலுவப்பட்டி, டி-செட் மைதானத்தில் நேற்று துவங்கியது.டிசெட் அமைப்பு தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். முன்னாள் தலைவர் சுதாமா கோபால கிருஷ்ணன், நிக்கான்ஸ் வேலுச்சாமி, சுப்ரீம் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். திருப்பூர், வித்ய விகாசினி பள்ளி தாளாளர் தர்மலிங்கம் வாலிபால் போட்டியை துவக்கி வைத்தார்.ஆண்கள் வாலிபால் ஜூனியர் பிரிவில், 24 அணிகளும், சீனியர் பிரிவில், 15 அணிகளும் பங்கேற்றன. 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. டிசெட் செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில், வித்யவிகாசினி பள்ளி அணி - ஆத்துப்பாளையம், ஏ.வி.பி., பள்ளி அணிகள் மோதுகின்றன.மற்றொரு அரையிறுதி போட்டிக்கு, பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பள்ளி அணி, பிரன்ட்லைன் அகாடமி பள்ளி அணி தகுதி பெற்றுள்ளன. இன்று பள்ளி மாணவியருக்கான வாலிபால் போட்டிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ