மேலும் செய்திகள்
8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு
25-Jan-2025
திருப்பூர்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (29ம் தேதி) மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, பிப்., 22ம் தேதி தேர்வு நடக்கிறது.தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு, 2024 டிச., 31ல் துவங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், மாணவ, மாணவியர் நலன் கருதி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நாளை (29 ம் தேதி) மாலை, 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக தேர்வுக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
25-Jan-2025