அச்சமில்லை... அச்சமில்லை
சத்திற்காக வீர மரணம் எய்திய மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது; ராணுவ வீரர்களின் பெருமையைப் பறைசாற்றும் படமாக இது அமைந்தது.திருப்பூர் மாவட்டத்தில், ராணுவத்தில் பணியாற்றி தேசத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் பலர். தனது மகளுக்கு மகாகவி பாரதியாரின் 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே; உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற பாடல் வரிகளைச் சொல்லிக்கொடுத்து தேசப்பற்றை விதைத்துச்சென்றவர் முகுந்த். இன்றைய இளம்தலைமுறையினரிடம் தேசப்பற்றை ஊட்டும் விதமாக... இதோ, ராணுவத்தில் பணியாற்றி தேசம் காத்தவர்களின் பேட்டிகள்...வாசகர்களுக்காக...!