புதிய புறவழிச்சாலை திட்டம் வேண்டாம்; பழைய திட்டத்தை நிறைவேற்றுங்கள்
பல்லடம்; பல்லடத்தில், புதிதாக திட்டமிடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தால் அதிக பாதிப்புகள் உள்ளதால், பழைய திட்டத்தை நிறைவேற்றுமாறு, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கடந்த, 2018ம் ஆண்டு, காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டம் கைவிடப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமையும் புறவழிச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டுக்கு சென்றன. இச்சூழலில், புதிய புறவழிச்சாலை அமைக்க தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பல்லடம் வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி பொறியாளர் அஞ்சலியை சந்தித்து, பழைய திட்டத்தின்படியே புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், 'பழைய புறவழிச்சாலை திட்டத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதன்படி, புறவழிச்சாலை அமையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது, புதிய புறவழிச்சாலை திட்டம், பல்லடம் நகரை ஒட்டி அமைவதாக தெரியவந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலில் பெரிய அளவு மாற்றம் இருக்காது. மேலும், புதிய புறவழிச்சாலை திட்டத்தால், ஏராளமான கிணறுகள், குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வரும் நிலையில், தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். மேலும், புதிய புறவழிச்சாலை திட்டம் அமையுள்ள பகுதியில் குறு சிறு விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். இதனால், விவசாயிகள் பலரும் நிலத்தை இழக்க நேரிடும். புதிய திட்டத்தால் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதால், பழைய திட்டத்தின்படி புறவழிச்சாலை அமைக்க வேண்டும்' என்றனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்திய உதவி பொறியாளர் அஞ்சலி, 'இது தொடர்பாக கோட்ட பொறியாளரிடம் பரிந்துரை செய்வதுடன், அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துச் சென்றனர். பல்லடம், ஜூலை 31--பல்லடத்தில், புதிதாக திட்டமிடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தால் அதிக பாதிப்புகள் உள்ளதால், பழைய திட்டத்தை நிறைவேற்றுமாறு, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கடந்த, 2018ம் ஆண்டு, காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டம் கைவிடப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமையும் புறவழிச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டுக்கு சென்றன. இச்சூழலில், புதிய புறவழிச்சாலை அமைக்க தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பல்லடம் வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி பொறியாளர் அஞ்சலியை சந்தித்து, பழைய திட்டத்தின்படியே புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், 'பழைய புறவழிச்சாலை திட்டத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதன்படி, புறவழிச்சாலை அமையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது, புதிய புறவழிச்சாலை திட்டம், பல்லடம் நகரை ஒட்டி அமைவதாக தெரியவந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலில் பெரிய அளவு மாற்றம் இருக்காது. மேலும், புதிய புறவழிச்சாலை திட்டத்தால், ஏராளமான கிணறுகள், குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வரும் நிலையில், தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். மேலும், புதிய புறவழிச்சாலை திட்டம் அமையுள்ள பகுதியில் குறு சிறு விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். இதனால், விவசாயிகள் பலரும் நிலத்தை இழக்க நேரிடும். புதிய திட்டத்தால் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதால், பழைய திட்டத்தின்படி புறவழிச்சாலை அமைக்க வேண்டும்' என்றனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்திய உதவி பொறியாளர் அஞ்சலி, 'இது தொடர்பாக கோட்ட பொறியாளரிடம் பரிந்துரை செய்வதுடன், அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துச் சென்றனர்.