உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடையடைப்பு போராட்டம் இல்லை

கடையடைப்பு போராட்டம் இல்லை

உடுமலை; உடுமலையில், கடையடைப்பு போராட்டம் இல்லை, என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.உடுமலை வியாபாரிகள் சங்கத்தலைவர் பாலநாகமாணிக்கம், செயலாளர் மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:வாடகை கட்டடங்களுக்கான மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அடுத்த கட்ட போராட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், நமது அமைப்பை சாராத சிலர், இன்று (டிச.,18) கடையடைப்பு என தெரிவித்து வருகின்றனர். உடுமலை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்போடு இணைக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் அறிவிப்பு இல்லாமல், எந்த விதமான போராட்டங்களிலும் பங்கேற்காது.எனவே, உடுமலையில் இன்று வழக்கம் போல், கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !