உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிர் உரிமைத்தொகை வேண்டாம்: பெண் தொழிலாளர்கள் போர்க்கொடி

மகளிர் உரிமைத்தொகை வேண்டாம்: பெண் தொழிலாளர்கள் போர்க்கொடி

திருப்பூர்; உரிமைத்தொகை வழங்குவதை ரத்து செய்துவிட்டு, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலமாக,பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பில், 17 வகை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகின்றன. கட்டுமான பணிகள் நடக்கும் போது, 1 சதவீதம் அளவுக்கு, தொழிலாளர் நலநிதி பிடித்தம் செய்யப்படுகிறது. கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் நிதி ஆதாரம் வலுவாக இருக்கிறது.நலவாரிய உறுப்பினர்களுக்கு, 60 வயது பூர்த்தியானதும், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கலாம். நலவாரியம் மூலம் மாதம், 1,200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்,மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாதம், 1000 ரூபாய் பெறும் பெண்கள், ஓய்வூதிய உதவி பெறமுடியாத சூழல் உள்ளது.புதிய நிபந்தனையால், பெண்களுக்கான ஓய்வூதிய உதவி எட்டாக்கனியாக மாறிவிட்டதாக, பெண்கள் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூரில் நடந்த, கட்டுமான தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யு.சி.,) மாநாட்டில், 'மகளிர் உரிமைத்தொகை வேண்டாம்; நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து, ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேகர் கூறுகையில்,''உரிமைத்தொகை பெறும் கட்டுமான நலவாரிய பெண் தொழிலாளர்களுக்கு, 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்க முடிவதில்லை. உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கவோ, முறையிடவோ சரியான கட்டமைப்பு இல்லை; தி.மு.க., நிர்வாகிகளை சந்திக்குமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். நலவாரிய உறுப்பினர், உரிமைத்தொகை பெற்று வந்தாலும், ரத்து செய்விட்டு, நலவாரியம் வாயிலாக, ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ