உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உரிய விலை கிடைக்கவில்லை; குப்பையில் நாவல் பழங்கள்

உரிய விலை கிடைக்கவில்லை; குப்பையில் நாவல் பழங்கள்

திருப்பூர்; நாவல் பழங்கள் விற்பனை இல்லாததால், வியாபாரிகள், அவற்றை குப்பையோடு குப்பையாக வீசி விட்டு சென்றனர்.கோடை சீசனில் பல்வேறு இடங்களிலும் கிடைக்கும் நாவல் பழம், மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் பழமாக கருதப்படுகிறது. சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் வைத்தும், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் வைத்தும், இந்த பழத்தை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.தமிழகத்தில், நத்தம் பகுதியில் பெருமளவில் நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு விளைச்சல் குறையும் பட்சத்தில், ஆந்திராவில் இருந்து நாவல் பழங்கள் தருவிக்கப்படுகின்றன என, விவசாயிகள் கூறுகின்றனர்.விற்பனை மந்தமாக இருந்ததால், திருப்பூர், தென்னம்பாளையம் சந்தை அருகேயுள்ள ஜம்மனை ஓடையில், குவியலாக நாவல் பழங்களை, வியாபாரிகள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.---தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் கொட்டப்பட்டுள்ள நாவல் பழங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை