தமிழை கொலை செய்யும் அறிவிப்பு பலகைகள்
திருப்பூர்: சாலையில் பயணிப்போரின் வசதிக்காக அடுத்த வரும் ஊர்கள் எவ்வளவு துாரத்தில் உள்ளது, நால்ரோடு, மூன்று ரோடு, சந்திப்பு, சிக்னல்களில் இருந்து இடது அல்லது வலது புறம் திரும்பினால், எந்தெந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்பதற்கு வழிகாட்ட வழிகாட்டி பலகை நெடுஞ்சாலைத் துறையால் நிறுவப்படுகிறது.இத்தகைய பலகைகளில் தமிழ்மொழியை தப்பும், தவறுமாக நெடுஞ்சாலைத்துறை குறிப்பிடுவது வேதனை தரும் விதமாக உள்ளது. திருப்பூர் - பெருமாநல்லுார் ரோட்டில் காங்கயம் சாலை என்பதற்கு பதிலாக கங்கயம் சாலை எனவும், அவிநாசி சாலை என்பதற்கு அவினாசி சாலை என்றும், எஸ்.ஆர்.சி., மில் ரவுண்டானா அருகே ஊத்துக்குளி என்பதற்கு பதிலாக உத்துக்குளி என ஊர் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது.மாநகரின் நுழைவு வாயிலாக உள்ள கணக்கம்பாளையம் சிக்னல் சந்திப்பில், ஊர் பெயர் ஸ்டிக்கர் பெயர்ந்து விழுந்து ஆறுமாதமாகிறது; பெயர் பலகை மட்டும் உள்ளது. மும்மூர்த்திநகர்ஸ்டாப்பில் நெடுஞ்சாலைத்துறை பலகை இரண்டாக பெயர்ந்து சேதமாகியுள்ளது.இவ்வாறு மாநகரின் பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை நிறுவியுள்ள வழிகாட்டி பலகைகள் ஊர் பெயர்களை தவறாக காட்டும் நிலையிலும், சேதமாகியும் உள்ளது. நிறுவுவதோடு சரி; ஆண்டுக்கணக்கில் ஆனாலும் அவற்றை பராமரிப்பதில் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.