மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ். முகாம்; மாணவர்கள் துாய்மை பணி
30-Sep-2025
உடுமலை; பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா நடந்தது. இக்கிராமத்தில், மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேலும், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை பயிற்சி, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு, நினைவாற்றல் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். முகாம் நிறைவு விழாவில், உதவி தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி தலைமை வகித்தார். முதுகலை கணித ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜான்பாஷா முகாம் அறிக்கையை வாசித்தார். ஆசிரியர் சண்முகவேல் நன்றி தெரிவித்தார். * புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி முகாம் நிறைவு விழாவில், பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அசோக்குமார் திட்ட அறிக்கை வாசித்தார். சிறப்பாக சேவை செய்த மாணவர்களுக்கு, நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
30-Sep-2025