உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊட்டச்சத்து தொகுப்பு செடிகள்; பொதுமக்களுக்கு அழைப்பு

ஊட்டச்சத்து தொகுப்பு செடிகள்; பொதுமக்களுக்கு அழைப்பு

உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலைத் துறை வாயிலாக, ஊட்டச்சத்து தொகுப்பு நாற்றுக்கள் மானிய விலையில் விநியோகம்- செய்யப்படுகிறது.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:காய்கறிகள் மற்றும் பழங்களின் தினசரி தேவை, சராசரியாக ஒரு நபருக்கு, 400 கிராம் ஆகும். ஆனால், தினசரி உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் குறைவாக உள்ளது. இதன் இடைவெளியை குறைக்கவும், மக்களின் அன்றாட தேவையில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து தொகுப்பாக, நாற்றுக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள பொதுமக்களுக்கு, வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை ஆகிய நான்கு செடிகளும் சேர்த்து மொத்தம், ரூ.15க்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2,300 ஊட்டச்சத்து தொகுப்பு செடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பெற்று, வீட்டு தோட்டத்தில் ஊட்டச்சத்து மிகுந்த செடிகள் வளர்த்தால், அன்றாட தேவைக்கான பழங்கள், காய்கறிகள் கிடைக்கும். இயற்கை முறையில் வளர்ப்பதன் வாயிலாக, பூச்சிக்கொல்லிகள் இல்லாத நச்சுத்தன்மையற்ற பழங்கள், காய்கறிகள் கிடைக்கும்.ஊட்டச்சத்து தொகுப்பு செடிகளை பெற விரும்பும் பொதுமக்கள், ஆதார் கார்டு நகல் கொடுத்து, மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; பூவிகா தேவி 80720 09226; பபிதா 85250 25540 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, ஊட்டச்சத்து தொகுப்பு செடிகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ