உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ம.தி.மு.க., ஆண்டு விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து

ம.தி.மு.க., ஆண்டு விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து

பல்லடம், : பல்லடம் அருகே, ம.தி.மு.க., சார்பில் நடந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., இளைஞர் அணி சார்பில், அக்கட்சியின், 32வது ஆண்டு விழா பல்லடம் அருகே அருள்புரத்தில் கொண்டாடப்பட்டது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆனந்தன், பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் நந்தகோபால், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஆண்டு விழாவை முன்னிட்டு, அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ம.தி.மு.க., நிர்வாகிகள் பாலு, சதீஷ்குமார், ரமேஷ், கவுரி, மகேஸ்வரன், நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை