உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அக். மாத மின் கட்டணத்தை டிசம்பருக்கும் செலுத்தலாம்

 அக். மாத மின் கட்டணத்தை டிசம்பருக்கும் செலுத்தலாம்

திருப்பூர்: திருப்பூர் கோட்ட மின் செயற்பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார் அறிக்கை: கொங்கு நகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, வ.உ.சி., நகர் பகிர்மான பகுதிகளில், நிர்வாக காரணங்களால், மின் கணக்கீடு செய்யவில்லை. இப் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள், கடந்த அக்., மாத மின் கட்டணத்தையே, டிச., மாதத்துக்கும் செலுத்தலாம். குறிப்பாக, வ.உ.சி., நகர் 1 முதல் 5 வீதிகள் மற்றும் பாப்பன்னா நகர் முழுவதும் உள்ள மின் நுகர்வோர், இம்மாதமும், அக்., மாதம் செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ