உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் சாகுபடி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

நெல் சாகுபடி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு, கல்லாபுரம் பகுதியில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், வேளாண் விஞ்ஞானி துக்கையண்ணன், இணை இயக்குனர் சுந்தரவடிவேல், உதவி இயக்குனர் தேவி மற்றும் வேளாண் அலுவலர்களை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமராவதி ஆயக்கட்டு கல்லாபுரம் பகுதிகளில், இயந்திர நடவு வாயிலாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், போதிய இடைவெளியில் நாற்றுக்கள் உள்ளதால், சிறப்பாக வளர்ந்து, நன்கு துார்பிடித்துள்ளது. ஒரு சில வயல்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளது, கண்டறியப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு நுண்ணுாட்ட உரம், ஏக்கருக்கு, 5 கிலோ வீதம் இட விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது நிலவும் கால நிலையில் பயிர்கள் நன்கு வளரவும், அதிக மகசூல் கிடைக்கவும், ஒரு ஏக்கருக்கு பாக்டீரிமைசின், 50 கிராம், தயோமீதாக்சம் 70 கிராம் கலந்து, தெளிக்க வேண்டும். இம்மருந்து தெளித்த, 5 நாட்களுக்கு பின், ஏக்கருக்கு, 40 கிலோ யூரியா மற்றும் 20 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளதால், இந்த தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும், என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை