உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்

கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்

திருப்பூர்: மலர்களால், அத்தப்பூ கோலமிட்டு, கோவில்களில் ஓணம் பண்டிகை கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் பகுதியில் மலையாள மக்கள் நீண்ட நாட்களாக வசித்து வருகின்றனர். ஓணம் பண்டிகை பாரம்பரிய விழா என்பதால், பெரும்பாலானோர், கேரளா சென்று கொண்டாடி வருகின்றனர்; சிலர், திருப்பூரிலேயே கொண்டாட துவங்கிவிட்டனர். கேரள மக்கள் அதிகம் வழிபாடு நடத்தும் கோவில்களில், நேற்று ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடந்தன. அவ்வகையில், ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், சுவாமிக்கு அதிகாலையில் அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, தங்ககவச அலங்காரத்துடன் குருவாயூரப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், கோவில் வளாகத்தில், பல்வகை மலர்களால் அத்தப்பூ கோலம் அமைத்து, தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது; அத்தப்பூ கோலமிட்டும், தீபம் ஏற்றி வைத்தும் வழிபட்டனர். கேரள பாரம்பரிய உடையணிந்து, வீடு மற்றும் கோவில்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி