மேலும் செய்திகள்
பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
07-Mar-2025
உடுமலை; பழநி, கருப்பணன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து,59. கோவையில் நகைக்கடை வைத்துள்ள அவர், இரு சக்கர வாகனத்தில், பழநியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.உடுமலை அருகே வந்து கொண்டிருந்த போது, உடுமலையிலிருந்து பழநி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான ஆனைமலை, அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமாரை,36, பிடித்து விசாரித்து வருகின்றனர்.
07-Mar-2025