உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்லைனில் கடன்; வாலிபர் தற்கொலை

ஆன்லைனில் கடன்; வாலிபர் தற்கொலை

திருப்பூர்; திருப்பூரில், 'ஆன்லைன் ஆப்பில்' வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், வாலிபர் தற்கொலை செய்தார். திருப்பூர், செரங்காட்டை சேர்ந்தவர் தினேஷ், 26; பனியன் தொழிலாளி. சில மாதங்களுக்கு முன், மொபைல் போன் வாயிலாக ஆன்லைன் கடன் ஆப்களில் பணம் பெற்றார். அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் அதற்கான வட்டியும் அதிகமாகி வர, பணத்தை திருப்பி செலுத்த வற்புறுத்தி வந்தனர். இதனால், மனமுடைந்த தினேஷ் விஷம் குடித்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ