ஆர்டி விவாஹா ஜூவல்லரியில் 2 சதவீதம் மட்டும் செய்கூலி சேதாரம்
திருப்பூர் : ஈரோடு, ஆர்டி விவாஹா ஜூவல்லர்ஸின் நிதியாண்டு நிறைவை முன்னிட்டு, இன்றும், நாளையும் (2, 3ம் தேதி), 2 சதவீத செய்கூலி சேதாரத்தில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.நிதியாண்டு நிறைவையொட்டி, வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்துக்கு, செய்கூலி, சேதாரம் இல்லாமல், 'தங்கம் விலைக்கே தங்கம்' என்ற சிறப்பு விற்பனை, கடந்த, 30 மற்றும், 31ம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், அடுத்த சிறப்பு விற்பனையாக, 2 பவுனுக்கு மேல் தங்கம் வாங்குவோருக்கு, 2 சதவீதம் செய்கூலி, சேதாரத்தில் தங்கம் விற்பனை நேற்று துவங்கியது.இந்த விற்பனை இன் றும், (2ம் தேதி), நாளையும் (3ம் தேதி) நடக்கிறது. இதில், ஆன்டிக் வளையல்கள், கம்மல், நெக்லஸ், குந்தன் நகைகள், விக்டோரியா நகைகள் உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக, ஆர்டி குழும நிறுவனங்களின் நிறுவனர் செந்தில்குமார், நிர்வாக இயக்குனர் கீர்த்தனா ஆகியோர் தெரிவித்தனர்.