உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறந்த வெளி கழிவுநீர் கால்வாய்; நெடுஞ்சாலையில் ஓர் ஆபத்து

திறந்த வெளி கழிவுநீர் கால்வாய்; நெடுஞ்சாலையில் ஓர் ஆபத்து

பல்லடம்; பல்லடம், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள திறந்தவெளி கழிவு நீர் கால்வாயால், வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.பல்லடம் - காரணம்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திறந்தவெளி கழிவு நீர் கால்வாய் ஒன்று, வாகன ஓட்டிகள், பாதசாரிகளை அச்சுறுத்தி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையுடன், என்.ஜி.ஆர்., ரோடு சந்திக்கும் இடத்தில், வளைவுப் பகுதி உள்ளது. இந்த இடத்தில், கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதி திறந்த நிலையில் உள்ளது. இந்த இடம் வளைவான பகுதி என்பதால், வாகன ஓட்டிகள், கால்வாய் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது.மேலும், ரோடு பகுதியில் குறுகலாக இருப்பதால், வாகனங்களில் இருந்து விலகிச் செல்ல, ரோட்டோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் ஆபத்து காத்திருக்கிறது. ரோடு விரிவாக்க பணியின் போதும், தேசிய நெடுஞ்சாலை துறை இதை கவனத்தில் கொள்ளவில்லை.நகராட்சி நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. விபத்து ஏற்படும் முன், கழிவுநீர் கால்வாய்க்கு சிலாப் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை