உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரங்கம் திறப்பு

அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரங்கம் திறப்பு

அவிநாசி; அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவுச்சுடர் கலையரங்க திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, மலர் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். கோவை கே.ஜி., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பக்தவச்சலம் கலையரங்கத்தையும், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் திருக்குறள் கல்வெட்டையும், திருமுருகநாதசுவாமி திருமடம் சுந்தரராஜ அடிகளார் திருவள்ளுவர் கல்வெட்டையும் திறந்து வைத்தனர்.வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி, சுமதி, திருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் விஜயலட்சுமி, திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, முன்னாள் மாணவர் பேரவையினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். அவிநாசி அறிவுச்சுடர் அறக்கட்டளையின் தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ