உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதற்கிளை நுாலகத்தில் இணைப்பு கட்டடம் திறப்பு

முதற்கிளை நுாலகத்தில் இணைப்பு கட்டடம் திறப்பு

உடுமலை; உடுமலையில் முதற்கிளை நுாலகத்தில், ரூ. 22.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இணைப்பு நுாலகம் திறக்கப்பட்டது.உடுமலை தளி ரோட்டில், முதற்கிளை நுாலகம் செயல்படுகிறது. இங்கு, 18 ஆயிரம் வாசகர்கள், 1.20 லட்சம் நுால்கள், சிறுவர் பகுதி, இணைய தள வசதி என மாதிரி நுாலகமாக செயல்படுகிறது.போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையமும் செயல்படும் நிலையில், இங்கு பயின்ற, 31 பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசு அலுவலர்களாக உள்ளனர்.இக்கிளை நுாலகத்தில், 520 சதுர அடி பரப்பளவில், ரூ.22.50 லட்சம் செலவில், வாசகர்கள் வசதிக்காக புதிதாக இணைப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.நுாலகத்தில் நடந்த விழாவில், முன்னாள் நகராட்சி தலைவர் வேலுசாமி, நுாலகர்கள் பீர்பாஷா, அபிராமி சுந்தரி, பத்மகுமாரி, பாத்திமா, ஜெயராமன் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி