உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆப்பரேஷன் சிந்துார்; அவிநாசியில் ஊர்வலம்

ஆப்பரேஷன் சிந்துார்; அவிநாசியில் ஊர்வலம்

அவிநாசி, ; 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையால் தேசத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில், அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்து, புதிய பஸ் நிலையம்வரை, வழி கல்வி அறக்கட்டளை, காமராஜர் களம் அறக்கட்டளை ஆகியன இணைந்து மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. ராபா திருமண மண்டபத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் தாக்குதலின் நிகழ்வுகளை மாணவர்களுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் எடுத்துரைத்தனர். சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாக ராணுவ வீரர்களின் கைகளில் ரக் ஷா பந்தன் கயிறுகளை பள்ளி மாணவர்கள் கட்டினர். நிகழ்ச்சியை வழி கல்வி அறக்கட்டளை தலைவர் மாலதி, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் திவ்யப்பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரண்யா மற்றும் காமராஜர் கலாம் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ