உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

திருப்பூர்;'உலகில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தேடி வராது; அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசினார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2021 - 2022 ம் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.விழாவில், பங்கேற்ற எழுத்தாளர் பெருமாள்முருகன் பேசியதாவது:நம் முன்னோருக்கு கிடைக்காத கல்வியும், வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புக்காக மட்டுமே கல்வி பயிலாமல், அதனை உள்ளடக்கிய பல விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.நாளை எதிர்காலமாக உள்ள உங்களை நீங்களே ஒவ்வொரு நாளும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் கல்வி கற்று, வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவதால், அவர்களது தலைமுறையே வளர்கிறது. குடும்பத்தின் நிலையே மாறி விடுகிறது.பட்டம் பெற்றால், வேலை கிடைத்தால் போதுமென இருந்து விடாதீர்கள். உயர்கல்விக்கு செல்லுங்கள். அதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், சுயமாக கற்றுக்கொள்ளுங்கள்.உலகில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தேடி வராது; அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தங்கம் வென்ற தங்கங்கள்முதுகலை வேதியியல் துறையில், திவ்யா, ஆடை வடிவமைப்பியல் துறையில், வாணி, இளங்கலை பன்னாட்டு வணிகவியல் துறையில் பிரபாகரன் மூவரும், கோவை பாரதியார் பல்கலை அளவில், முதலிடம் பெற்று, பாராட்டு பெற்றனர். நிகழ்ச்சியின், நிறைவாக இளங்கலை பட்டம் முடித்த, 638 பேருக்கும், முதுகலை பட்டம் முடித்த, 143 பேருக்கும் என மொத்தம், 781 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ