ஆதரவற்ற குழந்தை மீட்பு உரிமை கோர வாய்ப்பு
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில், கடந்தாண்டு, அக்., 26ம் தேதி, 4 மற்றும், 3 வயதுள்ள இரு பெண் குழந்தைகளை அவர்களது தாய், தனியாக விட்டுச் சென்றுள்ளார்.அக்குழந்தைகள் ஈரோடு சைல்டு லைன் (1098) மூலம் மீட்கப்பட்டு, ஈரோடு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு, ஈரோடு சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளிடம் விசாரித்ததில், அவர்களது பெற்றோருடன் திருப்பூரில் வசித்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.இக்குழந்தைகள் குறித்து உரிமம் கோருபவர்கள், உரிய ஆவணங்களுடன், 30 நாட்களுக்குள், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.705, 7வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர்' என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். யாரும் உரிமை கோராத பட்சத்தில், குழந்தைகளுக்கு, சட்டபடி பெற்றோர் இல்லை எனக்கருதி, குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோர்களுக்கு சட்டப்படி தத்து வழங்கப்படும். அதன் பின், குழந்தைகளை திரும்ப பெற இயலாது.மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர், 99949 73413 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.