மேலும் செய்திகள்
கிராம சாலையை சீரமைக்க பழங்குடியின மக்கள் மனு
04-Mar-2025
திருப்பூர், மங்கலம் ரோடு, சுல்தான்பேட்டையில், இந்திரா காலனி உள்ளது. அப்பகுதியிலுள்ள தனியார் இடத்தில், உரிமம் பெற்ற மதுக்கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதி. அருகில் சுற்றுலாத்தலமாக ஆண்டிபாளையம் படகு இல்லம் அருகே அமைந்துள்ளது. மதுக்கூடம் அமைந்தால், பல்வேறு விதமான பிரச்னைகள் எழும் என்று இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.எனவே, 'பார்' திறக்க அனுமதிக்க கூடாது என்று அப்பகுதியினர் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று இந்திரா காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர்.
04-Mar-2025