மேலும் செய்திகள்
சிப்காட் 'போம்' நிறுவனத்தில் தீ
22-Jan-2025
திருப்பூர்;திருப்பூரில் பெயின்டிங் கடையில், பொருட்கள் இருப்பு வைத்திருந்த கிடங்கில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தாராபுரத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 60. திருப்பூர் - வீரபாண்டி ரோடு, பலவஞ்சிபாளையம் பகுதியில் பெயின்ட் கடை வைத்துள்ளார். இதன் பின், ஒரு கிடங்கில் ஆயில் உள்ளிட்ட பெயின்ட் கேன் மற்றும் பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென இந்த கிடங்கிலிருந்த பேரல்களில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இது குறித்து தகவலறிந்த தெற்கு தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.கெமிக்கல் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவியது. உடனடியாக அந்த ரோட்டில் போலீசார் வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர். தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை. வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jan-2025