உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழனியப்பா பள்ளியில் நாளை புத்தாக்கப் பெருவிழா

பழனியப்பா பள்ளியில் நாளை புத்தாக்கப் பெருவிழா

அவிநாசி; அவிநாசி, கச்சேரி வீதியில் செயல்படும் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், நாளை (8ம் தேதி) புத்தாக்கப் பெருவிழா நடக்கிறது. பள்ளி தாளாளர் ராஜ்குமார் முன்னிலை வகிக்க உள்ளார்.திருவள்ளுவர், மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியேரின் சிலைகள் நிறுவப்பட்டு, திறப்பு விழா நடைபெற உள்ளது. உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு அரங்கம், வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களின் திறப்பு விழா என, முப்பெரும் விழாவாக இந்நிகழ்ச்சி நடைபெறும்.சிறப்பு விருந்தினர்களாக, கல்வியாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர், ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி ஹரிவிரதானந்த மகராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.கவுரவ விருந்தினர்களாக, கோவை பயனீர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் முருகேசன், ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தனசேகர், பூபதி ஆகியோர் பங்கேற்று, பேச உள்ளனர். நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை