உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி

படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி

அவிநாசி, சேவூர் ரோடு, மாமரத்தோட்டம் பகுதியில் பசுமை சூழலில் அமைந்துள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, கடந்த, 2007ல், அவிநாசி மக்களுக்கு தரமான, நிறைவான கல்வி வழங்கும் நோக்கில்,எஸ்பிஆர்., அறக்கட்டளை முயற்சியால், ராஜ்குமார் தலைமையில், மாதேஸ்வரி செயலாக்கத்தில், 70 மாணவர்களுடன் துவங்கப்பட்டது.தொடர்ந்து, பள்ளி இயக்குனர் டாக்டர் பிரகாஷ், கல்வி இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார் முயற்சியால், 2010ல், மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 2022ல், இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியாக மத்திய அரசின் அங்கீகாரத்துடன், 1,100 மாணவர்களுடன் செயல்படுகிறது.பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர்.சதீஷ்குமார் கூறியதாவது:மாணவர்களை சரியான வழியில் ஊக்கப்படுத்துவது, தரமான கல்வி, தொடர் முயற்சியால் வெற்றி பெற செய்வது, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு ஆகியவற்றை ஊக்குப்படுத்தி வருகிறோம். 21ம் நுாற்றாண்டின் திறன்களை வெளிக்கொணர செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக்கற்றல் திறன்களை மேம்படுத்த, ஜி.டி., நாயுடு அருங்காட்சியகம், இயற்கை விவசாயம் நடைபெறும் இடங்களுக்கு களப்பயணம் அழைத்து செல்கிறோம்.மாணவர்கள், இயற்கையை நேசிக்க செய்யும் நோக்கில், 'வனம்' இந்தியா அறக்கட்டளை சார்பில் களப்பயணம் அழைத்து சென்று, மரக்கன்று நட்டு, சமூக காடு வளர்க்க ஊக்குவிக்கிறோம். மாணவர்களின் தலைமைப் பண்பை ஊக்குவிக்க ஐ.நா.,சபை - 2024, களம் - 2024, திறன் - 2024, பாரத சாரண, சாரணியர் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.மாதிரி ஐ.நா., சபை நிகழ்வில் பங்கேற்க சென்னை அமெரிக்கன் பள்ளி, சேலம் அரைஸ் இன்டர்நேஷனல் பள்ளி, ஸ்ரீ காயத்ரி பள்ளிக்கு எம் பள்ளி மாணவர்கள் சென்று பங்கேற்றனர். பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான பயிற்சி, நீட், ஜெஇஇ., ஐஐடி., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.ஐதராபாத்தில் நடந்த கணிதப்பட்டறை பயற்சி வகுப்பில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பங்கேற்று சிறப்பு பயிற்சி பெற்றனர். மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆங்கிலம், ஹிந்தி பேச்சாற்றல் பயிற்சி, நிதி கல்வி, வங்கியியல் மற்றும் வங்கி அமைப்பு களின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கும் நடத்தப்படுகிறது. மொழி பாடங்களை மேம்படுத்த கரடிபாத், தமிழினி போன்ற சிறப்பு பாட திட்டங்களும் உள்ளன.உலக முதியோர் விழிப்புணர்வு தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகை, தேசிய விழாக்கள் மற்றும் திறன் பாராட்டு விழா போன்றவையும் நடத்தப்படுகின்றன. படைப்பாற்றல் நிறைந்த மாணவர்களை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை