மேலும் செய்திகள்
புதர் மண்டிய நிலையில் நீர் வரத்து கால்வாய்கள்
14-Apr-2025
நொய்யல் பாசன கட்டமைப்பு சிதிலமாகியிருந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, அதைப் பராமரித்து இயற்கையை மீட்டெடுக்கும் பணி, கொங்கு மண்டலத்தில் நடக்கிறது. குறிப்பாக, திருப்பூரிலும் நொய்யல் ஆறு மற்றும் அதைச் சார்ந்துள்ள குளம், குட்டைகளும் பராமரிக்கப்பட்டு தண்ணீர் ததும்புகிறது. வறண்ட குளம்
ஒவ்வொரு குளத்தையும், தன்னார்வ அமைப்பினர், பசுமை ஆர்வலர்கள் தத்தெடுத்து, ஆண்டுக்கு இருமுறை துார்வாரி சுத்தம் செய்து பராமரித்து வருகின்றனர். திருப்பூர் மேற்கு ரோட்டரி அறக்கட்டளை வாயிலாக, துார்வாரி பராமரித்து, ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்ட, பள்ள பாளையம் குளம், தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.சாமளாபுரம் பேரூராட்சி எல்லையில் உள்ள பள்ளபாளையம் குளத்தில், 27 ஏக்கர், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மானது; மீதி பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. சாமளாபுரம் குளம் நிரம்பி வழியும் போது, உபரிநீர் வாய்க்கால் வழியாக சென்று, பள்ளபாளையம் குளத்தை நிரப்புகிறது. சரியற்ற நீர் நிர்வாகம்
பள்ளபாளையம் குளம் நிரம்பினால், உபரிநீர் வாய்க்கால் வழியாக சென்று, பரமசிவம்பாளையம் அருகே, மீண்டும் நொய்யலில் சென்று கலக்கிறது. கடந்தாண்டில், நிரம்பி வழிந்த குளங்களில், தற்போதும் தண்ணீர் இருக்கிறது. ஆண்டிபாளையம் குளம், கடந்த வாரங்களில் நிரம்பி வழிந்தது.அப்படியிருந்தும், சரியான நீர்நிர்வாகம் இல்லாததால், பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மிகுந்த பொருட்செலவில், ஆழப்படுத்தி, துார்வாரி தயார்படுத்திய பள்ளபாளையம் குளம், ஒருமுறை மட்டுமே நிரம்பியது; சில நாட்கள் தண்ணீர் திறப்பது; பிறகு நிரந்தரமாக தடுப்பது என, தண்ணீர் குறைந்து, வறண்ட நிலையில் காணப்படுகிறது.''நொய்யல் குளங்கள் பிறவற்றுக்கு நீர் தடைபடாது வரும் போது பள்ள பாளையம் குளம் மட்டும் 'பாவம்' செய்ததா?''என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.தண்ணீரைஅடைப்பதே காரணம்பள்ளபாளையம் குளம் நிரம்பியிருந்தால் மட்டும், தெற்கு பகுதியில், 10 கி.மீ., தொலைவுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். தண்ணீர் இருந்தும், வாய்க்கால் இருந்தும், குளம் துார்வாரப்பட்டும், முழுமையாக தண்ணீர் விடாமல் தடுக்கின்றனர். சாமளாபுரம் குளத்தில் மீன் வளர்ப்பவர்கள், மீன்கள் வெளியேறிவிடுவதாக கூறி, அடிக்கடி தண்ணீரை அடைக்கின்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பெரிதாக கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு, சாமளாபுரம் குளம் வழியாக, பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் திறக்கவும், குளத்தை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்கள் வெளியேறுவதை தடுக்க, நிரந்தர வலை அமைப்பை நிறுவ அறிவுறுத்த வேண்டும். மாறாக, தண்ணீர் விடாமல், குளம் வறண்டு போகும் அளவுக்கு வஞ்சிக்க கூடாது.- பள்ளபாளையம் விவசாயிகள்.
14-Apr-2025