மேலும் செய்திகள்
முடுதுறை ஊராட்சியில் 1,000 பனை விதைகள் நடவு
22-Sep-2025
பொங்கலுார்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை நீரை சேகரித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் போன்ற நோக்கங்களுக்காக தமிழக அரசு ஊராட்சிகளில் பனை விதை நடவு செய்ய உத்தரவிட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் விதை நடப்பட உள்ளது. ஒரு ஊராட்சிக்கு, 5,000 பனை விதைகள் வீதம் தமிழகம் முழுவதும், 6.36 கோடி பனை விதைகளை நடவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு திரும்பிய பக்கம் எல்லாம் பனை மரங்களாக காட்சியளிக்கும். எங்கு பார்த்தாலும் பனை விதைகளை காண முடியும். தற்போது பெரும்பாலான பனை மரங்கள் வெட்டப்பட்டதால் ஒரு சில இடங்களில் மட்டுமே பனை மரங்கள் உள்ளன. தற்போது ஊராட்சி பகுதியில் உள்ள குளம், குட்டைகள், நீர் வழித்தடங்களில் பனை விதைகளை நடவு செய்வதற்காக ஊராட்சிகள் சார்பில் பனை விதை சேகரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடக்கிறது.
22-Sep-2025