மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்ற எளிய வழி
17-Nov-2024
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுார் ஊராட்சி, அம்மன் நகரில் ஓடை புறம்போக்கு, 30 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை ஒரு சமூகத்தினர் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு சிலர், சுடுகாட்டை ஆக்கிரமித்து குடிசை போட்டனர். அப்பகுதி பொது மக்கள் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அந்த இடத்திற்கு சென்ற ஊராட்சி துணை தலைவர் வேலுசாமி (தி.மு.க.,), ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, பொதுமக்கள் அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பிரச்னை நடந்த இடத்திற்கு வந்த தாசில்தார் ஆக்கிரமித்து போடப்பட்ட குடிசைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அகற்றவில்லை என்றால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டி வரும் என்று எச்சரித்தார்.அதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள், குடிசையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முன்தினம் இரவு அம்மன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
17-Nov-2024