பி.ஏ.பி., 3ம் மண்டலத்துக்கு 29ல் நீர் திறக்க முடிவு
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு தலைமை வகித்த, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது: இரண்டாம் மண்டல பாசன சுற்று முடிந்ததும், கோர்ட் உத்தரவுப்படி வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக்கரை அணைக்கு, 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இதன்பின், மூன்றாம் மண்டல பாசனத்துக்கு வரும் ஜன., மாதம், 29ம் தேதி முதல் ஐந்து சுற்று, 10,300 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் வாயிலாக, 95 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதற்கு அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இவ்வாறு, பரமசிவம் கூறினார். - நமது நிருபர் -