உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைந்த இடத்தில் காகித படகு போராட்டம்

குழாய் உடைந்த இடத்தில் காகித படகு போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டுக்கு உட்பட்ட பெரிய கடை வீதி மாநகராட்சி பள்ளிகள், பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில், பெரிய பள்ளி வாசல் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளுக்குச் செல்லும் வழியாக உள்ளது.இந்த வீதியில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதில் ஏராளமான குடிநீர் வீணானது. இதை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. முறையாக குழி மூடப்படாமல், மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேல் இந்த நிலை நீடிக்கிறது.இதற்காக மாநகராட்சியைக் கண்டித்து, மா.கம்யூ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் காகித படகு விட்டு தங்கள் எதிர்ப்பை ெவளிப்படுத்தினர். மா.கம்யூ., தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி