உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாராலிம்பிக் நீச்சல் போட்டி: அவிநாசி மாணவர் தகுதி

பாராலிம்பிக் நீச்சல் போட்டி: அவிநாசி மாணவர் தகுதி

அவிநாசி: அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சபரி ஆனந் த், 13. அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். முதுகுத் தண்டுவடம் பாதிப்பு கொண்ட சபரி ஆனந்த், இடுப்புக்கு கீழ் செயல்பட முடியாத, நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி மாணவர். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த, 2024ல், கோவாவில் நடந்த தேசிய அளவிலான பாராலிம்பிக் விளையாட்டில் நீச்சலில் மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த மாதம் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டுச் சங்கம் சார்பில் சென்னை, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 50 மீட்டர் பிரிவு, ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக் என மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வரும், 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில், இரண்டாவது முறையாக பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். தன்னம்பிக்கையுடன் சாதனை படைத்து வரும் சபரி ஆனந்தை, வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், குமரன், ஆனந்த், பாலசுப்பிரமணியம், ஆகியோர் பாராட்டி, நிதியுதவி அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் யசோதா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சிபு, சுதீஷ் ஆகியோரையும் தி.மு.க.வினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை