மேலும் செய்திகள்
ஓய்வு ஆசிரியருக்கு பாராட்டு
01-Jun-2025
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவியரை வரவேற்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் ஜி.வி.ஜி அரங்கில் நடந்தது.கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி வரவேற்றார். ஆலோசகர் மஞ்சுளா முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி, கல்லுாரியின் தனித்துவம் குறித்தும் பேசினார். இயற்பியல் துறை பேராசிரியர் அறம், துறையின் சிறப்பம்சங்கள் குறித்தும், தமிழ்த்துறை இணை பேராசிரியர் செடிப்பவுன், மற்ற துறைகள் குறித்து பேசினர்.பெற்றோர் ஆசிரிரயர் சங்க உறுப்பினர் பிருந்தா நன்றி தெரிவித்தார்.
01-Jun-2025