உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லை; அரசு பள்ளி சேர்க்கையில் குழப்பம்

பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லை; அரசு பள்ளி சேர்க்கையில் குழப்பம்

உடுமலை; அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, உயர்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்விக்கான கல்லுாரியில் சேர்வதற்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதனால், தற்போது மருத்துவ படிப்பை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவான விழிப்புணர்வு இல்லை.நடப்பு கல்வியாண்டில், அரசுப்பள்ளிகளில் சேர்க்கையின் போது பெரும்பான்மையான பெற்றோர், மாணவர்களை தமிழ்வழியில் மட்டுமே சேர்த்துள்ளனர். இட ஒதுக்கீடு ஆங்கிலவழி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கிடைக்காது என, தவறாக புரிந்து கொண்டு பெற்றோர் மாணவர்களை தமிழ் வழியில் சேர்க்கின்றனர். இன்னும் சில பெற்றோர் பள்ளியிலும் விசாரிக்காமல், ஆங்கில வழியில் மாணவர்களை சேர்ப்பதற்கு அரசுப்பள்ளிகளை புறக்கணிக்கின்றனர். அரசு பள்ளிகளில் இடஒதுக்கீடு சலுகை குறித்து, பெற்றோருக்கு விளம்பர பலகை வாயிலாக, அல்லது முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தாலும், இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற முடியும் என்ற முறை இன்னும் பல பெற்றோருக்கு தெரிவதில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் பெற்றோர் கவனிக்கும் வகையில், இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் பிற குழுக்கள் வாயிலாக, முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி