வாசகர்கள் கருத்துகள் ( 1 )
8வழி சாலையில் வாகன நெரிசல் ஒழுக்கம் இன்மையால்
பல்லடம்;மேற்கு பல்லடத்தில், வாகனங்கள், ரோட்டிலேயே பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல்லடம் நகராட்சி, மேற்கு பல்லடத்தில், ஏராளமான குடியிருப்புகள், கடைகள் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெரும்பாலான வங்கிகளும் இங்கு தான் அமைந்துள்ளன. இதன் காரணமாக, வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. தினசரி, பள்ளி கல்லுாரி செல்லும் வாகனங்கள், பனியன் கம்பெனி வேன்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் உள்ள வங்கி கட்டடங்களில், முறையான பார்க்கிங் வசதி கிடையாது. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள், வாகனங்களை ரோட்டிலேயே பார்க்கிங் செய்கின்றனர். இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள், நெரிசலில் சிக்கி திணறுகின்றன. தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமான வழி என்பதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில், வாகன பார்க்கிங்கை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8வழி சாலையில் வாகன நெரிசல் ஒழுக்கம் இன்மையால்