கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்கலாம்
உடுமலை; பயிற்சி முகாமில், இளைஞர்கள் பங்கேற்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.படித்த இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், வேலை வாய்ப்பு பயிற்சிகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு, கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச எலக்ட்ரிக்கல், வயரிங், பிளம்பிங் ஒர்க் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் சரி செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு மாத பயிற்சி முகாம், வரும், 24ம் தேதி துவங்குகிறது.எழுத, படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.பயிற்சிக்கு, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கேயம் ரோடு, விஜயாபுரம், திருப்பூர் -என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 948904 3923, 99525 18441, 86105 33436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.இந்த பயிற்சி முகாமை, கிராமப்பு இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.