கட்சியில் இணையும் விழா
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் கட்சியில் இணையும் விழா நடந்தது.வேலம்பாளையம் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று பல்வேறு கட்சியிலிருந்து விலகிய பலரும் தி.மு.க.,வில் இணைந்தனர். தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்டோரும், மாற்று கட்சிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் தங்கராஜ், அவைத் தலைவர்கள் நடராஜன், ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.