உள்ளூர் செய்திகள்

பயணியர் அவதி

உடுமலை, ; உடுமலையில் முக்கிய பஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை இல்லாததால், பயணியர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு நிழற்கூரை இல்லை.இதனால், பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், பயணியர் நிழற்கூரை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ