உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாசன நிலங்களுக்கு பாதை விவசாயிகள் வலியுறுத்தல்

பாசன நிலங்களுக்கு பாதை விவசாயிகள் வலியுறுத்தல்

பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, வாரப்பட்டி கிராமத்தில், 400 ஏக்கர் பரப்பளவில், தொழில் பாதுகாப்பு பூங்கா அமைய உள்ளது. இதற்கான நிலம் எடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.முன்னதாக, பூங்காவுக்கான நிலம் வழங்கிய விவசாயிகள், பாசன நிலங்களுக்குச் செல்ல பாதை அமைத்துவிட்டு பணிகளைத் தொடருங்கள் என, அதிகாரிகளிடம் திட்டவட்டமாக கூறினர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொழில் பூங்காவுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் வழியாகத்தான், விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதை உள்ளது. இந்த வழியைத்தான் இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது, தொழில் பாதுகாப்பு பூங்கா பணிகள் துவங்கிவிட்டால், பாதுகாப்பு நடவடிக்கை கருதி, இந்த வழித்தடத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். எனவே, ஏற்கனவே பயன்படுத்தி வரும் வழித்தடத்தை ஒதுக்கிவிட்டு, அதன் பிறகு சாலை அமைக்கும் பணிகளை தொடர வேண்டும்' என்றனர்.முன்னதாக, அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர் தொடர்ந்து, பாதை குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், பாதைக்கான தீர்வு ஏற்படுத்திவிட்டு பணிகளைத் தொடருங்கள் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து, நாளை கலெக்டரை சந்தித்து முறையிட விவசாயிகள் தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை