உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் விழாவில் பட்டிமன்றம்

கோவில் விழாவில் பட்டிமன்றம்

கருவலுார் - எலச்சிபாளையத்தில் பொன்னர் சங்கர், மகாமுனி, கருப்பராய சாமி கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடந்தது. 'குடும்பத்தின் வெற்றிக்கு துாணாக இருப்பது தாயா? தாரமா?' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்துக்கு, தேவகோட்டை மகாராஜன் நடுவராக இருந்து, 'குடும்பத்தின் வெற்றிக்கு துாணாக இருப்பது தாரம் தான்' என தீர்ப்பு வழங்கினார்.'குடும்பத்தின் வெற்றிக்கு தாய் தான்', என மஞ்சுநாதன், பேராசிரியர் ரவிக்குமார்; 'தாரம் தான்' என புதுவை கவுதமி; சென்னை ராணி ஆகியோர் பேசினர். கருவலுார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சத்தியபாமா அவிநாசியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ