மேலும் செய்திகள்
இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு பதிவு
11-May-2025
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
04-May-2025
திருப்பூர், : திருப்பூர் அருகே, செவந்தாம்பாளையத்தில் உறவினர் நிலத்தில் குடிசை போட்டு ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடந்தது. போலீசார் விசாரித்து சமரசம் செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில், சில குடும்பத்தினருக்குப் பாத்தியப்பட்ட பூர்விக விவசாய நிலம் உள்ளது. இதில் சிலர் தங்கள் பாகத்துக்கு உரிய நிலத்தை கம்பி வேலி அமைத்துள்ளனர்.நேற்று வெங்கடாசலம் - வாணி ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள வேலியை சேதப்படுத்தி உள்ளே நுழைந்த விஜயகுமார் என்பவர் அங்கு தனது பொருட்களை வைத்து, குடிசை போட முயற்சி செய்தார். தகவல் அறிந்து அங்குவெங்கடாசலம் குடும்பத்தினர் அங்கு சென்று பேசினர். இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து நல்லுார் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் முன்பே இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து, உரிய ஆவணங்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு தரப்பும் விசாரணைக்கு வருமாறு தெரிவித்துச் சென்றனர்.மேலும், வேலியைக் கடந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களை விஜயகுமாரை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக நேற்று காலை அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.
11-May-2025
04-May-2025