உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சக்கைப்போடு போடும் பெகா நிட்டிங் மெஷின்

சக்கைப்போடு போடும் பெகா நிட்டிங் மெஷின்

தி ருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு, சீனாவின் பெகா நிட்டிங் மெஷினை வழங்கி வருகிறது, 'கே.எம்., நிட்டிங் நிறுவனம். இதன் நிர்வாக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கடந்த, 2018 முதல், திருப்பூர் பின்னல் துணி உற்பத்தி நிறுவனங்களுக்கு, நிட்டிங் மெஷின் சப்ளை செய்து வருகிறோம். தற்போது, சீனாவில் உற்பத்தியாகும், 'பெகா' நிட்டிங் மெஷினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டில், 120 மெஷின்களை விற்பனை செய்துள்ளோம்; கண்காட்சியில், முதல் நாளிலேயே, ஆறு மெஷின்கள் விற்பனையாகியுள்ளது. ஜெர்மன் உதிரி பாகங்களை கொண்டு, 'பெகா' மெஷின் உற்பத்தி செய்யப்படுகிறது, அனைத்து வகையான 'பேப்ரிக்' ரகங்களையும் உற்பத்தி செய்யலாம். குறிப்பாக, நல்ல 'பீலிங்' தரத்துடன், லைக்ரா துணியையும் நிட்டிங் செய்ய முடியும். நான்கு ஒயர் பேரிங்குடன் மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கும் மெஷினில் உள்ளது போன்ற தரம், 23 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும், 'பெகா' நிட்டிங் மெஷினில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு, 97500 00057 என்ற எண்களில் அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை