உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம்

கிடப்பில் ஓய்வூதிய விண்ணப்பம்

கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற, 60 வயதுக்கு மேற்பட்ட பூசாரிகள் சமர்ப்பிக்கும் ஓய்வூதிய விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட உதவி ஆணையர் அலுவலகங்களில், ஆறு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கிடப்பில் போடுவதால், எண்ணற்ற பூசாரிகள் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இரண்டு மாதத்துக்கு பதிலாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். சிலர் இறந்த பின்னும் அவர்களது வங்கி கணக்கிலேயே ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வாழ்நாள் சான்று அவர்களிடம் முறையாக பெறப்படுவதில்லை.உதவி ஆணையர் அலுவலகங்கள் அல்லது வங்கிகளில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ