உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வழங்காததால் மக்கள் பாதிப்பு

குடிநீர் வழங்காததால் மக்கள் பாதிப்பு

உடுமலை; ஊராட்சியில் குடிநீர் வழங்காததால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி வெற்றிவேல் நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு உப்புத்தண்ணீர் மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் சரிவர வழங்கப்டுவதில்லை. மேலும், திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், குடிநீர் வழங்காததால், மக்கள் நீண்ட துாரம் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டியதுள்ளது. இதனால், அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, குடிநீர் வழங்க சின்னவீரம்பட்டி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ